News April 26, 2024
கேரளாவில் வாக்களித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஜனநாயகத்தில் வாக்களிப்பு மிக முக்கியமானது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களின் உரிமையைப் பயன்படுத்துவதில் சுணக்கம் காட்டக் கூடாது, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். சோம்நாத்துக்குக் கேரளாவில் வாக்கு இருந்த நிலையில், இதற்காகப் பெங்களூருவில் இருந்து இன்று கேரளா சென்ற அவர், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
Similar News
News March 8, 2026
விஜய் – த்ரிஷா.. Bodyguard சொன்ன தகவல்

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து SM பலரும் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜய்யின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ், தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது’ என கில்லி படத்தில் விஜய் – த்ரிஷா இருவரும் நடித்த ‘கொக்கரக்கொக்கர கோ’ பாடலை ஃபையர் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
News March 8, 2026
அன்புமணியை அதிரவிடும் ராமதாஸின் NDA கணக்கு!

NDA கூட்டணியில் இணைந்த அன்புமணிக்கு போட்டியாக திமுக கூட்டணியுடன் செல்ல நினைத்த ராமதாஸுக்கு விசிக செக் வைத்து தடுத்துவிட்டது. இதையடுத்து <<19303393>>தவெகவுடன் கூட்டணி என பேசப்படும் நிலையில்<<>>, பதறிப்போய் பாஜக தரப்பு ராமதாஸை தங்கள் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்நிலையில் 5 சீட் + மாம்பழம் சின்னம் என்ற நிபந்தனையுடன் பேசி வருவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 8, 2026
தங்கம் விலை இந்த வாரத்தில் ₹5,800 குறைந்தது!

தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடும் உயர்வைக் கண்டாலும், வர்த்தக ரீதியாக வார இறுதியில் சவரனுக்கு ₹5,800 சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200-க்கு விற்பனையான தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


