News October 21, 2024
இஸ்ரேலின் மெகா பிளான் கசிந்தது

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் போட்ட திட்டங்கள் கசிந்துள்ளன. இது குறித்து அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்த ரகசிய ஆவணங்கள், டெலிகிராம் செயலியில் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் மூலம் கடந்த 16,17ஆம் தேதிகளில் இஸ்ரேலிய ராணுவம் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், வான்வழியே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயிற்சியிலும் IDF ஈடுபட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
உலக சாதனை படைத்த Vice Captain ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டில் மாபெரும் ரெக்கார்ட் ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் ஃபார்மெட்டில், வெளிநாட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்(24 சிக்சர்கள் – ENG) என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ்(21 சிக்சர்கள் – SA), மேத்யூ ஹைடன் (19 -IND), ஹேரி ப்ரூக் (16- NZ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
News July 6, 2025
சிக்கன் விலை உயர்வு

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால் தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை இன்று ₹5 முதல் ₹10 வரை அதிகரித்துள்ளது.
News July 6, 2025
தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

அமித்ஷா நாளை(ஜூலை 7) சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார். மேலும், பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.