News April 8, 2025

ட்ரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்

image

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். வரி உயர்வுக்குப் பின் டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் நெதன்யாகுதான். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை இஸ்ரேல் நீக்கும் என நெதன்யாகு தெரிவித்தார். சீனா வரிவிதிப்பை குறைக்கவில்லை என்றால் எங்கள் முடிவு மிகவும் மோசமாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்தார்.

Similar News

News April 8, 2025

பிரம்ம குமாரி தாதி ரத்தன் மோகினி காலமானார்

image

பிரம்ம குமாரிகளின் தலைமை நிர்வாகி தாதி ரத்தன் மோகினி(100) அகமதாபாத்தில் காலமானார். கடந்த 2021 முதல் பிரம்ம குமாரிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து வந்த இவர்தான், 1954இல் ஜப்பானில் நடந்த உலக அமைதி மாநாட்டில் பிரம்ம குமாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர். பின்னர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆன்மிக சேவை புரிந்தார். தாதி ரத்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News April 8, 2025

சற்றுநேரத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு

image

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், கிடப்பில் போட்டதாக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

News April 8, 2025

தங்கம் விலை 5 நாள்களில் ₹2,680 குறைந்தது

image

கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹200, இன்று ₹480 என கடந்த 5 நாள்களில் மட்டும் ₹2,680 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை 5 நாள்களில் கிராமுக்கு ₹10, கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறையும் என்பதால், நகை பிரியர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!