News September 30, 2025

கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர்

image

காஸா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் PM நெதன்யாகு அமெரிக்கா சென்றார். இதனிடையே கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நெதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஜாசிம் அல் தானியை தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News March 17, 2026

வரலாற்றில் இன்று

image

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ‘கலிபோர்னியம்’ என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர். ➤1925 – நடிகர் மேஜர் சுந்தரராஜன் பிறந்தநாள். ➤1990 – பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிறந்தநாள்.

News March 17, 2026

புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

image

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் தங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றாலும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2026

ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

image

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள ஹாஸ்பிடல் மீது பாக் வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹாஸ்பிடல் மீது தாக்குதலை நடத்தவில்லை என பாக் மறுப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!