News April 2, 2024
மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் அதிபர் ‘டிஸ்சார்ஜ்’

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஜெருசலேத்தில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் நேற்று அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவரது உடல்நிலை குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மிகவும் நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்’ என குறிப்பிட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
BREAKING: விஜய்யின் அடுத்த முக்கிய முடிவு

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் நேற்றும் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இதனிடையே, விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல் என CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வராமல், கரூர் வழக்கை சட்ட வல்லுநர்களுடன் கையாள விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 20, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $65.14 உயர்ந்து $4,661.41-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $3.06 உயர்ந்து $93.19 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.20) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
கோயிலுக்குச் செல்லும் பொழுது..

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.


