News April 28, 2025
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் பலி 52,000ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 52,243 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 29, 2025
2,180 குடும்பங்கள் மொத்தமாக அழிப்பு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 52,243 பாலஸ்தீனியர்களில் 65% பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18,000 குழந்தைகள், 12,400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,180 குடும்பங்களை மொத்தமாக அழித்ததாகவும் கூறியுள்ளது. மேலும், 1,400 டாக்டர்கள், 212 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை பேர் உயிரிழந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.
News April 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 321 ▶குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். ▶பொருள்: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
News April 29, 2025
பாஜகவில் இணையும் ப்ரீத்தி ஜிந்தா?

உங்களது சமீபகால பதிவுகள் பாஜக சார்பாக இருக்கிறதே, நீங்கள் அக்கட்சியில் இணைய போகிறீர்களா என ரசிகர் ஒருவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் X தளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை பதிலளித்துள்ளார். மேலும், கோயில், மகா கும்பமேளாவிற்கு செல்வது, தன்னுடைய அடையாளத்தை நினைத்து பெருமைப்படுவது என்பது பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.