News October 5, 2025
முடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல்

காசாவிற்கு நிவாரண பொருள்களை கொண்டு சென்ற சமூக ஆர்வலர்களை, இஸ்ரேல் ராணுவம் விலங்குகளை போன்று நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை, முடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தியதாகவும், இஸ்ரேல் கொடியை முத்தமிட வைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மொத்தம் 137 சமூக ஆர்வலர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Similar News
News October 5, 2025
ஆணவத் திமிருக்கு எதிராக TN போராடும்: CM ஸ்டாலின்

தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டதற்கு, இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என கூறும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும் என்று அவர் கூறியுள்ளார்.
News October 5, 2025
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலம் இதுதான்!

உள்நாட்டு சுற்றுலாவில், ராஜஸ்தான், பெருமளவிலான பயணிகளை கவர்ந்து வருகிறது. கோவா, கேரளா மாநிலங்களை விட அதிகளவிலான மக்கள், குறைந்த செலவில் அனுபவமிக்க பயணத்தை தரும் ராஜஸ்தானுக்கு படையெடுக்கின்றனர். அதன் அமைதியான பாலைவனம், பாரம்பரிய நகரங்கள், அரண்மனைகள், கோட்டைகள், வண்ணமயமான விழாக்கள் ஆகியவை மக்களை ஈர்க்கின்றன.
News October 5, 2025
முக்கிய ரீசார்ஜ் பிளானை நீக்கிய Vodafone- Idea

வாடிக்கையாளர்கள் அதிகளவில் யூஸ் செய்த ₹249 ரீசார்ஜ் பிளானை Vodafone- Idea நிறுவனம் நிறுத்தியுள்ளது. 28 நாள்கள் validity, தினமும் 1 GB டேட்டா, Unlimited போன் அழைப்புகளை கொண்ட இந்த திட்டத்தை தனது ஆப்பில் இருந்து Vodafone நீக்கியுள்ளது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் 1GB டேட்டா ஆப்ஷனை நிறுத்தியதை தொடர்ந்து Vodafone- Idea-ம் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.