News March 20, 2025
மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: காசாவில் மரண ஓலம்

காசா மக்களின் வாழ்க்கை மீண்டும் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 21, 2025
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து (தகுதியான பெண்கள்) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்யலாம் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டு, ஆதார், மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் PHOTO கொடுத்து விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
News March 21, 2025
இது கேவலத்திலும் கேவலம்: BJP

டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் ஒட்டுவதைத் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாலியல் வன்கொடுமை, கொலைகள் & குடிபோதையில் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் குண்டர்களை காவல்துறையால் தடுக்க முடியவில்லை. ஆனால், பலரின் குடியைக் கெடுக்கும், டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்க, துப்பாக்கியுடன் காவல் காப்பது கேவலத்திலும் கேவலம் என்று விமர்சித்துள்ளது.
News March 21, 2025
டிரைவர், கண்டக்டர் வேலை: இன்றே விண்ணப்பிக்கலாம்!

அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி <