News October 23, 2024

ஹிஸ்புல்லா அமைப்புக்கு அதிர்ச்சி அளித்த இஸ்ரேல்

image

ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹாஷிம் சஃபிதீனை இஸ்ரேல் படைகள் கொன்றதாக IDF அறிவித்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு லெபனானின் தஹியாவில் உள்ள பதுங்கு குழி மீது நடத்தியத் தாக்குதலில் அந்த அமைப்பின் புலனாய்வுப்பிரிவு தலைவர் அலிஹுசைன் & முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதில் சஃபிதீனும் உயிரிழந்ததால் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News November 27, 2025

திருவள்ளூர்: முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்ணை தாக்கிய கணவர் கைது

image

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஷ்வா(33). இவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கும், இரு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கணவர் வீட்டில் முதலிரவு நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறைக்குள், தாம்பத்யம் சம்பந்தமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோஷ்வா, மனைவியை தாக்கியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஜோஷ்வாவை நேற்று கைது செய்தனர்.

News November 27, 2025

BREAKING: செங்கோட்டையனுக்கு பதவி.. விஜய் அறிவித்தார்

image

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 27, 2025

துயரத்தில் தோள் கொடுப்பதே நட்பு❤️

image

மங்களகரமாக நடைபெறவிருந்த திருமணம் திடீரென நின்றதால், <<18381176>>ஸ்மிருதி மந்தனா<<>> பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இத்தகைய இக்கட்டான சூழலில் தனது தோழியுடன் நிற்க வேண்டும் என கருதிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸி.,யில் நடைபெறும் WBBL தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த கோரிக்கையை அவர் விளையாடி வந்த Brisbane Heat அணியும் ஏற்றுக்கொண்டது. தோழிக்காக ஜெமிமா செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!