News March 24, 2025

50,000 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. தீவிரமடையும் போர்

image

ஹமாஸை அழிக்கும் வரை போர் நிறுத்தப் போவதில்லை என்ற வேகத்தில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023 தொடங்கி தற்போது 50,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. 1.13 லட்சம் பேர் காயமடைந்து உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 25, 2025

வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர் சிவா, மலையேறி சிவனை தரிசித்துவிட்டு, திரும்புகையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கத்தினாலும், முறையான மலையேறும் பயிற்சி இல்லாததாலும் பக்தர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2025

அமித் ஷாவை சந்தித்த G.K.வாசன்

image

டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்தார். கூட்டணி கட்சியான அவர், அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இன்று மாலை EPS அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஜி.கே.வாசனின் சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

News March 25, 2025

3 நாட்கள் தொடர் விடுமுறை

image

வரும் ஞாயிறு முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறையாகும். மார்ச் 29 (சனி), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 (திங்கள்) ரம்ஜான் என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவு நாள் என்பதால் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். இதையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த லீவுல உங்கள் பிளான் என்ன?

error: Content is protected !!