News April 14, 2024
இஸ்ரேல் – ஈரான் போர்! இந்தியாவின் நிலைப்பாடு?

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை நிறுத்தி, அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இஸ்ரேல் – காஸா போரிலும் இதே நிலைப்பாடு கொண்டிருக்கும் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்க மறுத்து நடுநிலை காத்தது குறிப்பிடத்தக்கது. நடுநிலை என்பதே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.
Similar News
News November 26, 2025
61 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 61 மனுக்கள் வர பெற்றன. இதனை ஆய்வு செய்த எஸ்பி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News November 26, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் டிச.7, 25 தேதிகளில் நடைபெறவுள்ள செவ்வாய் பெயர்ச்சிகளால் பின்வரும் 3 ராசிக்காரர்கள் அதிக நன்மைகள் பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது *கன்னி: நிதிச்சிக்கல்கள் குறையும், முதலீடு லாபம் தரும். *மகரம்: புதிய சொத்துகள் வாங்கும் யோகம் தொடங்கும், நிதிச்சிக்கல்கள் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கும்பம்: டிசம்பர் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும். தம்பதிகள் உறவு மேம்படும். வெற்றியும் லாபமும் கிட்டும்.
News November 26, 2025
6,000 பேரை பணிநீக்கம் செய்யும் HP

AI-ன் வரவால் பல டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2028-க்குள் 4,000 முதல் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக HP தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே AI எவ்வாறு பணியாற்றும் என்பதை ஆய்வு செய்து வந்ததாகவும், இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனம் ₹8,926 கோடியை சேமிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், இது நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.


