News April 6, 2025
இதுக்கு ஒரு ‘எண்டே’ இல்லையா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு அளவே இல்லையா? என நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த டிரம்ப், மனிதர்களே வசிக்காத தீவையும் விட்டு வைக்கவில்லை. அண்டார்டிகா அருகே பென்குயின்கள் மட்டுமே வாழும் 2 தீவுகளுக்கும் 10% வரி விதித்துள்ளார். பென்குயின்களிடம் இருந்தும் வரி வாங்காமல் விடமாட்டார் என மீம்கள் வைரலாகின்றன.
Similar News
News December 11, 2025
பாரதி புகழை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: CM

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் புகழை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என CM ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாரதியின் பெயரால் தமிழகத்தில் நடைபெறும் திட்டங்களை குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
கார்களின் விலையை அதிரடியாக குறைத்த மாருதி!

மாருதி சுசூகி நிறுவனம், தனது கார்களுக்கு அதிரடி சலுகைகள், தள்ளுபடி மூலம் விலையை குறைத்துள்ளது. இதன்படி, இன்விக்டோ காருக்கு ₹2.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில், பணமாக ₹1 லட்சம் வரையும், ஸ்கிராப் அல்லது எக்ஸேஞ்ச் போனஸ் ₹1.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல், சியாஸ் காருக்கு ₹1.3 லட்சம், ஜிம்னி காருக்கு ₹1 லட்சம், இக்னிஸ் காருக்கு ₹80 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
News December 11, 2025
தாய்லாந்தில் கோவா நைட் கிளப் உரிமையாளர்கள் கைது

<<18492944>>கோவா நைட் கிளப் தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த வழக்கில், அதன் உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கௌரவ் லுத்ரா மற்றும் சௌரப் லுத்ரா என்ற அந்த சகோதரர்கள் விபத்து நடத்த உடன் தாய்லாந்திற்கு தப்பி ஓடியுள்ளனர். போலீஸ் விசாரணையில் விதிமீறலே விபத்துக்கு காரணம் என தெரியவந்ததால், தாய்லாந்து போலீஸ் உதவியுடன் இருவரையும் பிடித்துள்ளனர். இன்று மாலை இருவரும் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.


