News March 1, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – முகமதின் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா – முகமதின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா – முகமதின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிரா ஆனது.
Similar News
News March 1, 2025
பேறு கால பெண்களின் கவனத்திற்கு….

பேறுகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. கர்ப்பிணி, வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைப்பதில், கால்சியம் & ஜிங்க் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பருப்பு வகைகள், காளான், சிவப்பு இறைச்சி, பால், அத்தி, பீன்ஸ், முந்திரி, பாதாம், பசலைக்கீரை, பூசணி விதை ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.
News March 1, 2025
போர் விமானங்களின் தேவை அதிகரிப்பு: ஏ.பி. சிங்

இந்தியா ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 24 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய விமானப்படை (IAF) தனது பழைய விமானங்களை மாற்றுவதற்கு ஆண்டுக்கு குறைந்தது 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
ஊழலின் மொத்த உருவம் கெஜ்ரிவால்: ரேகா குப்தா

கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன் என டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார். சிஏஜி அறிக்கை அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் ஊழலையும், மக்களின் ஆரோக்கியத்தோடு அவர்கள் விளையாடியதை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி டில்லியில் இருந்து வரி வசூலித்து, மற்ற மாநிலங்களில் தேர்தல்களுக்குப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.