News February 24, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரத்தில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.
Similar News
News February 24, 2025
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அறிவிப்பு

அகமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் விரிவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறுகிறது. இரண்டு கூட்டங்களுக்கும் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்க உள்ளார். இதில் அரசியல் அமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
News February 24, 2025
தமிழக மீனவர்கள் கைது: அண்ணாமலை கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News February 24, 2025
சச்சினின் சாதனையை சமன் செய்த கிங் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். சச்சின் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 100 சதங்களை அடித்துள்ள நிலையில், கோலி 82 சதங்களை நிறைவு செய்துள்ளார்.