News January 19, 2025

ஐ.எஸ்.எல்: கேரளா – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் ‘டிரா’

image

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் ‘டிரா’ ஆனது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.

Similar News

News March 30, 2026

ஈரான் போர்.. முதல் தமிழர் மரணம் PHOTO

image

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் குவைத்தில் தமிழர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். ஈரான் தாக்குதலில் அவர் உயிரிழந்த செய்தி அறிந்து குடும்பத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்குமாறும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 30, 2026

சீன CCTV-களுக்கு தடை… ஆக்‌ஷனில் மத்திய அரசு

image

ஏப்ரல் 1 முதல் Hikvision, TP-Link, Dahua போன்ற சீன CCTV கேமராக்கள் மற்றும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. நாட்டில் விற்கப்படும் CCTV தயாரிப்புகளுக்கு கண்டிப்பாக அனுமதி(STQC சான்றிதழ்) பெற வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இண்டர்நெட்டுடன் சேர்ந்து இயங்கும் இந்த கேமராக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே இதற்கு காரணம். நாட்டில் 3-ல் 1 சீன CCTV ஆக உள்ளது.

News March 30, 2026

மாதம்பட்டி வழக்கில் திருப்பம் தந்த DNA ரிப்போர்ட்!

image

திருமணம் செய்து தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில் <<19297528>>மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு (DNA)<<>> பரிசோதனை மேற்கொள்ள சென்னை HC உத்தரவிட்டிருந்தது. அதன்படி பரிசோதனை நடத்தப்பட்டு சென்னை HC-யில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதியாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!