News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 8, 2025
உண்மையில் DNA வடிவத்தை கண்டுபிடித்தது யார்?

டபுள் ஹெலிக்ஸ் DNA-வை கண்டுபிடித்தவர் <<18233802>>ஜேம்ஸ் வாட்சன்<<>> அல்ல. இவருக்கு முன்பே ரோசலிண்ட் பிராங்க்லின் என்ற பெண் இதனை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது. UK-வின் கிங்ஸ் காலேஜில் DNA-வின் படத்தை ரோசலிண்ட் வைத்திருந்தார். அந்த காலேஜுக்கு வாட்சனும் அவரது ஜூனியர் கிரிக்கும் சென்றபோது அதனை பார்த்ததாகவும், அதை வைத்தே டபுள் ஹெலிக்ஸ் வடிவத்தை கண்டுபிடித்து, நோபல் பரிசும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
News November 8, 2025
இடி மின்னலால் தடைபட்ட IND VS AUS ஆட்டம்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடி மின்னலின் தாக்கத்தால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தற்போது வரை மழை பெய்யாததால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்துள்ளது.
News November 8, 2025
BREAKING: வீடியோவை கொடுத்தார் விஜய்!

கரூர் பிரசாரத்தின் போது விஜய் பயணித்த பஸ்ஸின் சிசிடிவி காட்சிகளை தான்தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில், பிரசார பஸ் சிசிடிவி காட்சிகளை 3 நாள்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரியிருந்தது. இந்நிலையில், அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தவெக அலுவலகத்தின் உதவியாளர் குரு, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


