News July 5, 2024
சமையலறை பாத்திரங்களுக்கு ISI முத்திரை கட்டாயம்

துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினிய சமையலறை பாத்திரங்களுக்கு இந்திய தரநிலை நிறுவனத்தின் (ISI) முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத எஃகு அல்லது அலுமினியப் பாத்திரங்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News September 23, 2025
பகத் சிங் பொன்மொழிகள்

*தியாகம் என்பது ஒருபோதும் வீணாகாது
*அமைதி என்பது பலவீனத்தைக் குறிப்பதல்ல. அது வலிமையின் வெளிப்பாடு.
*உழைப்பின் மூலமாகவே ஒரு புதிய சமூகத்தை உருவாக்க முடியும்.
*ஒற்றைக் குறிக்கோள் கொண்ட மக்கள், உலகை மாற்றியமைப்பார்கள்.
*ஒரு நபர் கொல்லப்படலாம், ஆனால் அவரது சிந்தனைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.
News September 23, 2025
ஷூட்டிங்கில் விபத்தில் சிக்கிய ஸ்பைடர்மேன்

மார்வல் படங்களில் ஸ்பைடர்மேன் பட வரிசைக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில், ‘Spider-Man: Brand New Day’ படப்பிடிப்பின் போது ஸ்பைடர் மேனாக நடிக்கும், டாம் ஹாலண்ட்டுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. Stunt காட்சியின் போது தலையில் காயம் ஏற்பட, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெரிய காயம் இல்லாத்தால், விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 23, 2025
இரவா? பகலா?

நார்வே நாட்டில் உள்ள சோமரோய் என்னும் சிறிய தீவில் ஒவ்வொரு கோடை காலங்களில் 69 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை (Midnight Sun). குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதில்லை (Polar Night). இந்த ஊரில் கடிகாரம் இல்லை. இங்கு வாழும் மக்களுக்கு நேரம் ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு இந்த தீவில் வாழ ஆசையா இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.