News March 15, 2025

‘ஹனி டிராப்’ மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை பெற்ற ISI

image

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு கசியவிட்டதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திரநாத் என்பவரை உ.பி போலீசார் கைது செய்தனர். பெண்களை வைத்து மயக்கும் ‘ஹனி டிராப்’ முறையில், இந்த ஊழியரிடமிருந்து ரகசியங்களை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பெற்றது அம்பலமாகி உள்ளது. ‘பேஸ்புக்’ வாயிலாக ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்ட நேஹா சர்மா என்ற பெண், இந்திய ராணுவ ரகசியங்களை பெற்றுள்ளார்.

Similar News

News March 15, 2025

பூஜைக்கு அழைத்து நிர்வாண வீடியோ.. பெண் அதிரடி கைது

image

கலியுகத்தில் யாரை நம்பியும் வெளியில் செல்ல முடியவில்லை என சொல்லுவார்களே அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது இச்சம்பவம். பாலக்காட்டில் தோஷத்தை கழிக்க பூஜை என ஜோதிடரை வரவழைத்து, அவரை மிரட்டி பெண்ணின் அருகில் நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளது ஒரு கும்பல். 4.5 பவுன் நகை, ₹5,000ஐ அபேஸ் செய்த கும்பலை சேர்ந்த 44 வயது பெண் கைமூனா சிக்கியுள்ளார். 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 15, 2025

அவியல், கூட்டு போல வேளாண் பட்ஜெட்: இபிஎஸ்

image

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தும், விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைத்தது? என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் என்றும் சாடியுள்ளார். பல்வேறுத் துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

தவெக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார்

image

TVKவில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உயிர் பிரிந்தது. #RIP

error: Content is protected !!