News April 24, 2025
இஷான் கிஷன் மீது ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு

MI-க்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆனதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ‘#FIXING’ ட்ரெண்டாகி வருகிறது. அவுட் ஆகாமலே எந்தவித சந்தேகத்தையும், ரிவிவ்யூவையும் கேட்காமலும், அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் அவர் வெளியேறியதால், நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி இவ்வாறு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், BCCI கிஷனை ஒப்பந்தத்தில் எடுத்ததையும் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News April 24, 2025
காதல் சின்னத்தை ரசித்த USA துணை அதிபர்..!

இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் வந்துள்ள USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, PM மோடி விருந்தளித்தார். இந்நிலையில், மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை அவர் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.
News April 24, 2025
என்னை மாற்றியது இவர்தான்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

நிகழ்ச்சிகளில் THUG பதில் அளிப்பதிலும், குறும்பு சேட்டை செய்வதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கெட்டிக்காரர். முதலில் INTROVERT ஆக இருந்த தன்னை EXTROVERT ஆக மாற்றியதே இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்தான் என அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன் உள்ளிட்டோரிடம் வேலை செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டி.ராஜேந்தர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தன்னை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.