News October 24, 2025
ஜிமெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா?

பல நூற்றுக்கணக்கான மெயில்களால் இன்பாக்ஸ் நிரம்பி விட்டதா? இத பண்ணுங்க ★Browser-ல் ஜிமெயிலை ஓபன் பண்ணி, Inbox-ஐ கிளிக் பண்ணுங்க ★Search-ல் ‘Unsubscribe’-ஐ செலக்ட் செய்யவும் ★Display-ஆகும் அனைத்து மார்க்கெட்டிங் மெயில்களையும் டெலிட் பண்ண, Refresh button-க்கு இடதுபுறத்தில் இருக்கும் செக்பாக்ஸ்-ஐ கிளிக் செய்யவும் ★Trash icon-ஐ கிளிக் செய்தால் மொத்த மெசெஜும் ‘Trash folder-க்கு சென்றுவிடும்.
Similar News
News October 24, 2025
கவின் ஆணவக் கொலை: குற்றப்பத்திரிக்கை தயார்

காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில், CBCID போலீசார் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்துள்ளனர். அடுத்த ஓரிரு நாள்களில் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தையும் போலீஸுமான சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ளனர்.
News October 24, 2025
குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பெற்றோர்களே உஷார்!

வீட்டில் இருக்கும்போது கூட குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பழக்கம் வந்துவிட்டது. அதில் அவர்கள் ஒருமுறை சிறுநீர் கழித்தால் கூட Diaper-ஐ மாற்ற வேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இல்லையென்றால் அதனால் ஏற்படும் நோய் தொற்றால், Urinary Infection-ல் தொடங்கி, சில சமயங்களில் சிறுநீரகம் வரை நோய் தொற்றும் பரவ வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News October 24, 2025
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.


