News May 8, 2025
பாகிஸ்தான் சொல்வது உண்மையா?

இந்தியா ஏவிய டிரோன்களை <<16345828>>சுட்டு வீழ்த்தியதாக<<>> பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக லாகூர் விமான நிலைய ரேடார் நிலையத்தில் கிடந்த டிரோன் பாகங்களை அந்நாட்டு ராணுவம் காட்டியது. ஆனால், அப்படி இருக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். ஏன் தெரியுமா? இந்த சூசைட் டிரோன்கள் இலக்கை அடைந்தவுடன் தானே வெடித்து சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆகவே, பாக்., கூறுவது அவ்வளவு நம்பும்படியாக இல்லை.
Similar News
News November 24, 2025
BREAKING கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழப்பு. மேலும் உயிரிழந்த அப்பெண்ணின் உடலானது ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை கொன்ற புலியை உடனடியாக பிடிக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
சாக்பீஸை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

சிறு பொருளுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பள்ளிக்கூடத்து நினைவுகளுடன் பின்னி பிணைந்த சாக்பீஸ், கரும்பலகையில் எழுத மட்டும் தான் என நினைக்கிறோம். ஆனால் அதில், வீட்டை பராமரிப்பதில் இருந்து துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது வரை, பலரும் அறியாத அற்புத பயன்கள் புதைந்துள்ளன! அவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 24, 2025
புயல் உருவாகும் தேதி அறிவிப்பு.. கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் (நவ.26) புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் பெய்துள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.


