News April 15, 2025
இளையராஜா செய்வது சரியா? தவறா?

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் GBU படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது படைப்புக்கு அவர் உரிமை கோருகிறார், இதில் என்ன தவறிருக்கிறது என்று ஒரு தரப்பினரும், அவரது பாடல்கள் பொதுவானவைதானே, அதுக்கெல்லாமா பணம் கேட்பது என்று ஒரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களது கருத்து என்னவென்று கமெண்ட்டில் சொல்லுங்க.
Similar News
News January 16, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
News January 16, 2026
தாக்கரே சகோதரர்களுக்கு ‘ரசமலாய்’ அனுப்பிய பாஜக

மும்பை மாநகராட்சி தேர்தலில் <<18872687>>’மஹாயுதி’<<>> கூட்டணி 120-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் தஜிந்தர் பக்கா, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவுக்கு ஆன்லைனில் ‘ரசமலாய்’ ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். அண்ணாமலையை <<18833309>>ரசமலாய்<<>> என ராஜ் தாக்கரே விமர்சித்திருந்த நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்த இனிப்பை நீங்கள் ரசிப்பீர்கள்’ எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.
News January 16, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

₹1,000 மகளிர் உரிமைத் தொகை விரைவில் உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பொங்கலுக்குள் மகளிருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமியும் கூறியிருந்தார். 2 நாள்கள் பொங்கல் விடுமுறை முடிந்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் CM, இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


