News April 18, 2024
படத் தோல்வியால் அரசியலுக்கு வருகிறாரா விஷால்?

2004இல் செல்லமே மூலம் அறிமுகமாகி, 20 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் விஷால். 2018இல் வெளியான இரும்புத்திரை, சண்டைக்கோழி 2க்குப் பிறகு வந்த 7 படங்களுக்கும் போதிய வரவேற்பில்லை. இந்தச் சூழ்நிலையில் விரைவில் அவர் கட்சி தொடங்கப்போவதாகக் கூறியுள்ளார். இதைப் பார்த்த திரையுலகத்தினர், படத் தோல்வியால் அரசியலுக்குச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால் உண்மைக் காரணத்தை விஷாலே அறிவார்.
Similar News
News January 20, 2026
மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநாடு

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8-ம் தேதி, 10 லட்சம் தொண்டர்கள் கூடும் அளவுக்கு மாநாட்டை நடத்தும் தீர்மானமும் ஒன்று. இதேபோல் மாநாட்டை தொடர்ந்து வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை பிரசாரம் செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது.
News January 20, 2026
நடிகர் தனுஷுடன் காதல்.. சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்

நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாகவும், பிப்.14-ல் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு இருதரப்பினரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷுடன் காதலில் இருப்பதாக ஏற்கெனவே சில நடிகைகள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். ஆனால், அவையெல்லாம் வதந்திகளாகவே முடிவடைந்துள்ளன. அந்த நடிகைகளின் போட்டோக்கள் மேலே கொடுத்துள்ளோம்.
News January 20, 2026
₹100 கோடியில் ஹாட்ரிக் ஹிட் அடித்த SK..!

பொங்கல் விருந்தாக வெளியான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.10-ல் உலகமெங்கும் ரிலீசான ‘பராசக்தி’, முதல் 2 நாள்களில் ₹52 கோடியும், அடுத்த 9 நாள்களில் ₹48 கோடியும் வசூலித்துள்ளது. அமரன், மதராஸியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு இது ஹாட்ரிக் ₹100 கோடி படமாகும். நீங்க பராசக்தி பார்த்துட்டீங்களா? SK, ஸ்ரீலீலா நடிப்பு எப்படி?


