News September 28, 2025
சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்கிறாரா விஜய்?

கரூரில் நடந்த கோர சம்பவத்தை அடுத்து தனது சனிக்கிழமை சுற்றுப்பயணத்தை ஒத்திவைப்பது தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதால், அதனை சட்டரீதியாக எதிர்கொள்வது எப்படி எனவும் ஆலோசனை நடத்தவுள்ளாராம். முதற்கட்டமாக அடுத்த வாரம் (அக்.4) நடக்கவிருந்த திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பிரசாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
பதற்றத்திற்கு மத்தியில் IND vs BAN போட்டிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட IND vs BAN இடையிலான டி20 மற்றும் ODI தொடர், வரும் செப்டம்பரில் நடக்க உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 போட்டிகளை கொண்ட ODI தொடர் செப்டம்பர் 1, 3, 6-ம் தேதிகளிலும், டி20 தொடர் 9, 12, 13-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய அணி அந்த நாட்டிற்கு சென்று இந்த போட்டிகளில் விளையாட உள்ளது.
News January 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 3, 2026
விஜய் கட்சியில் இதற்குதான் இணைந்தேன்: ஜேசிடி பிரபாகர்

அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கும் பணி கைகொடுக்காததால் <<18744071>>தவெகவில் இணைந்ததாக<<>> ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதேபோல் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு விஜய் முழக்கம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.


