News August 16, 2024
உதயநிதி துணை முதல்வரா? இன்று முடிவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்தும், MLAக்களின் செயல்பாடுகள், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, திமுக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. இன்று திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 11, 2025
அரியலூர் காவல் துறை சார்பாக பொது ஏலம்

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் இன்று பொது ஏலம் விடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அதன்படி 12 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு மொத்த விற்பனை ஏலத்தொகையாக ரூ.2,72,934 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
News December 11, 2025
நீதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அவரை குறிவைப்பது சரியல்ல என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது மிரட்டலுக்கான அப்பட்டமான முயற்சி என்றும், இதை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 11, 2025
தவெகவில் வைத்திலிங்கம் இணைய மாட்டார்: டிடிவி

உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனே, தவெகவில் இணைய ஆசைப்படுகிறீர்களா என தொலைபேசியில் அழைத்து அவரிடம் கேட்டேன். அதற்கு ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என வருத்தப்பட்டார் எனக் கூறிய டிடிவி, அவரை காயப்படுத்துவது போல் இதுபோன்று பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.


