News October 28, 2025

பிக்பாஸில் களமிறங்குகிறாரா திருநங்கை ஜீவா?

image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9, மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், சிலர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மீண்டும் ஒரு திருநங்கை போட்டியாளர் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா போட்டியாளராக களமிறங்குகிறாராம்.

Similar News

News October 28, 2025

AK 65 இயக்குநர் இவரா? Big Update

image

விடாமுயற்சி, GBU என்று திரையில் ரசிகர்களுக்கு விருந்து வைத்துவிட்டு ரேஸிங்கில் பிஸியானார் அஜித். அவரது 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்நிலையில், அஜித்தின் 65-வது படத்தை ‘FIR’ பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’என்னை அறிந்தால்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது, ஆனந்த் – அஜித் இடையே ஏற்பட்ட நட்புறவால் இப்படம் கைகூடியுள்ளதாக தெரிகிறது.

News October 28, 2025

BREAKING: தீவிர புயலாக மாறியது.. கனமழை அலர்ட்

image

மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயல் வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் TN-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் IMD கூறியுள்ளது.

News October 28, 2025

அமித்ஷாவை அனகோண்டா என விமர்சித்த உத்தவ் தாக்கரே

image

அரசியல் சூழ்ச்சி மற்றும் நில அபகரிப்பு மூலம் மும்பையை முழுவதும் விழுங்க பாஜக முயற்சி செய்வதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மும்பையில் நிலத்தை அபகரித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டிய அவர், அனகோண்டாவை போல அனைத்தையும் அமித்ஷா விழுங்குவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ஆப்கானியப் படையெடுப்பாளர் அஹமது ஷா அப்தாலியுடன் BJP தலைவர்களை ஒப்பிட்டும் சாடியுள்ளார்.

error: Content is protected !!