News July 5, 2025
இன்றே உலகம் அழியும் நாள்? அதிர்ச்சி கணிப்பு

‘புதிய பாபா வாங்கா’ என அழைக்கப்படும் ரியோ தாட்சுகி, இன்று ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கும் என கணித்துள்ளார். நேற்று முன்தினம் ககோஷிமாவில் நிலநடுக்கம், ஷின்மோ எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், அவரது கணிப்பு உண்மையாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். பலர் சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்துள்ள போதிலும், ஜப்பான் வானிலை மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Similar News
News July 5, 2025
ஜூலை 7 (திங்கள்கிழமை) பொது விடுமுறை இல்லை!

மொஹரம் பண்டிகைக்கு ஜூலை 7(திங்கள்கிழமை) பொது விடுமுறை என சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு மொஹரம் பண்டிகை நாளை(ஜூலை 6) கொண்டாடப்படுவதாகவும், இதனால், ஜூலை 7-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை எனப் பரவும் தகவலில் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம் ஜூலை 7 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும்.
News July 5, 2025
அதிமுகவே தவெகவுக்கு சவால்: கனிமொழி

2026 தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் அறிவித்தார். இதற்கு MP கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு சவால் இல்லை என்றார். அதிமுக, தவெகவுக்கு சவாலாக இருக்கலாம் எனக் கூறினார். திமுக மீதும் CM ஸ்டாலின் மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
News July 5, 2025
திமுக மூத்த தலைவர் அய்யாவு காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதலே Ex CM அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். #RIP