News January 20, 2025

கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது இதற்குதான்?

image

சிறுபான்மை சமூகத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்காகவே அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். நாம் நாமாக இருந்தாலே இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் வாக்கு செலுத்துவார்கள் என்று கூறியிருக்கும் அண்ணாமலை, அதிமுக விலகலை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதற்கு அதிமுக என்ன பதில் சொல்லப் போகிறது?

Similar News

News March 17, 2026

வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

image

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி அரசு விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து லீவுதான். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!

News March 17, 2026

ELECTION: தேர்தலில் தோல்வியடைந்த முதல்வர்கள்!

image

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற 16 பேரவைத் தேர்தல்களில் இதுவரை 2 முதல்வர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். 1967-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இவர் தான் தற்போது வரை தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வர் ஆவார். அதேபோல் 1996-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுகவின் EG சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.

News March 17, 2026

கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

image

KYC அப்டேட்டால் <<19398205>>கேஸ் சிலிண்டர்<<>> புக் செய்பவர்களிடையே எழுந்துள்ள குழப்பத்திற்கு மத்திய அரசு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏற்கெனவே KYC அப்டேட் செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் மட்டுமே KYC பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை KYC அப்டேட் செய்யுமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!