News June 18, 2024
இதனால்தான் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இபிஎஸ் முடிவு செய்திருந்ததாகவும், செலவை முன்னாள் அமைச்சர் ஒருவரை கவனித்து கொள்ள கேட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்தொகையை தன்னால் செலவிட முடியாது, அப்படி செலவிட்டாலும் வெற்றி கிடைக்குமா என உறுதியாக தெரியாது என்பதால் மறுத்து விட்டதாலும், சீனியர்களின் அழுத்தத்தினாலுமே புறக்கணித்ததாகத் தெரிகிறது.
Similar News
News April 7, 2026
மாணவர்களுக்கு ₹25,000 வரை கொடுக்கும் அரசு திட்டம்

பழங்குடியினர் தொடர்பான ஆய்வு & ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குகிறது தொல்குடியினர் புத்தாய்வு திட்டம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News April 7, 2026
ஒரே தொகுதியில் 95.5% முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கம்

மேற்குவங்க CM மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் SIR-க்கு பிறகு 95.5% முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மம்தா, SIR-க்கு எதிரான குரல் தேர்தல் முடிவில் தெரியும் என கூறியுள்ளார். அதேபோல், SIR பணிகளால் நியாயமான தேர்தல் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் மம்தா உள்ளார் என அவரை எதிர்த்து களமாடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
News April 7, 2026
IPL: டெல்லி அணிக்கு அதிர்ச்சி.. அவர் இல்லாம எப்படி?

DC-ன் பந்துவீச்சாளர் ஸ்டார்க் மேலும் 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. தோள்பட்டை, முழங்கை பிரச்னைகளால் அவர் அவதிப்படுகிறார். இதனால், ஆஸி வாரியம் அனுமதித்தால் மட்டுமே, ஏப்.21-ல் SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இதனால் நடப்பு IPL-ல் இதுவரை தோல்வியை சந்திக்காத DC-க்கு பின்னடைவு ஏற்படுமோ என ரசிகர்கள் வருந்துகின்றனர்.


