News April 22, 2025
சித்த மருத்துவர் செய்யுற வேலையா இது?

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையை ₹1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சித்த மருத்துவர் சத்யபிரியா கைதாகியுள்ளார். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது, பிரசவம் பார்ப்பது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், திருமணத்தை மீறிய உறவில் பிறக்கும் குழந்தைகளை இது போல விற்பனை செய்து வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
Similar News
News September 19, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
*புதினாக் கீரை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
*கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாக கட்டி பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும். SHARE.
News September 19, 2025
ரயிலில் சிகரெட் பிடித்தால் என்ன அபராதம் தெரியுமா?

தட்டிக்கேட்ட ஆளில்லை என பலரும் ரயிலில் சிகரெட் பிடிப்பார்கள். ஆனால், ரயிலில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ரயில்வே சட்டம் 167வது பிரிவின் கீழ் சட்டப்படி குற்றமாகும். அப்படி, யாராவது மாட்டினால், அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்தியன் ரயில்வே தரப்பில் இருந்து அந்த பயணிக்கு ₹100- ₹500 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 19, 2025
ரோபோ சங்கரின் கனவை தடுத்த காலன்!

‘என் பேரனுக்கு நீங்கதான் பெயர் வைக்கணும்’ என்ற அளவுக்கு கமலின் மிக தீவிர ரசிகனான ரோபோ சங்கரின் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. ‘ஆளவந்தான்’ படம் பார்க்க கமல் போன்றே மொட்டையடித்துக் கொண்டு சென்ற சங்கருக்கு, கமலுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ‘இந்தியன் 2’-ல் வாய்ப்பு வந்தும் அது நிறைவேறாமல் போக, அவரின் கனவுக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.