News April 13, 2024
ஜெயிலர் 2ஆம் பாகத்தின் டைட்டில் இதுவா?

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்திருந்தார். அதன்படி, ஜெயிலர் 2 படத்திற்கு ‘ஹுக்கும்’ (Hukkum) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Similar News
News September 8, 2025
கேப்டனை திட்டி வளர்ந்தவர் சீமான்: விஜய பிரபாகரன்

சீமான் டிரெண்டிங்கில் இருக்கும் நபர்களை திட்டுபவர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய காலக்கட்டத்தில் டிரெண்டிங்கில் இருந்த கேப்டனை திட்டி சீமான் பெரிய ஆளாகினார் எனவும் பிறரை திட்டியே வாக்குகளை பெற்று கட்சியை வளர்த்தார் என்றும் கூறினார். மேலும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என விஜய பிரபாகரன் பேசினார்.
News September 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 8, 2025
ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

தற்போதைய வாழ்க்கை முறையில், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைபாடு அதிகரித்து வருகிறது. பின்வரும் உணவு வகைகளை தவிர்த்தாலே, இந்த பாதிப்பை குறைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்:
★பீட்சா, இனிப்புகள், சோடா, ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ★அளவிற்கு அதிகமான மது, சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ★அதிக கொழுப்புள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.