News September 7, 2025

BCCI பேங்க் பேலன்ஸ் இவ்வளவா?

image

BCCI வங்கிக் கணக்கில் ₹20,686 கோடி உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019-ல் ₹6,059 கோடியாக இருந்த பேங்க் பேலன்ஸ், கிட்டத்தட்ட ₹14,000 கோடி உயர்ந்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியினரின் பங்கு அளப்பரியது என்று கூறப்படுகிறது. சர்வதேச தொடர்களை விட IPL சீசன்களில் BCCI அதிக கல்லா கட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும் BCCI உள்ளது.

Similar News

News September 7, 2025

BREAKING: அதிமுக Ex MP விலகினார்

image

செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை Ex MP சத்யபாமா ராஜினாமா செய்தார். பின்னர் பேசிய அவர், அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால்தான் 2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற முடியும் என்றார். மேலும், நேற்று அந்தியூரில் மட்டும் 2,000 பேர் ராஜினாமா செய்த நிலையில், கோபி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலரும் ராஜினாமா செய்து வருவதாக தெரிவித்தார்.

News September 7, 2025

அண்ணாமலைக்கு எதிராக காய்நகர்த்தும் நயினார்?

image

பாஜக & அதன் கூட்டணியை நயினாரைவிட அண்ணாமலைதான் சிறப்பாக வழிநடத்தினார் என்ற பேச்சுகள் எழுந்ததால், இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவிவருவதாக பேசப்படுகிறது. இதனால் கடுப்பான நயினார், சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம். இதையறிந்த அண்ணாமலை தரப்பு மேலும் சூடாகி, டெல்லி தலைமையிடம் ரிப்போர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

News September 7, 2025

FLASH: செங்கோட்டையனை சந்திக்கும் ஓபிஎஸ்

image

அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என OPS உறுதியளித்துள்ளார். பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கோட்டையன் கூறிய 10 நாள்கள் கெடு முடிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, EPS-க்கு எதிரணியிலுள்ள பலரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!