News April 27, 2025
தோனிக்குப் பதில் இனி இவரா? CSK முக்கிய முடிவு

ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை (19) CSK பயிற்சி முகாமுக்கு அழைத்துள்ளது. இவரது செயலைப் பார்த்துவிட்டு, அவருக்கு வாய்ப்பு வழங்க CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மோசமான தோல்வியைச் சந்தித்து வரும் CSK அணியில் தோனிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் யாரும் இல்லை என ரெய்னா கூறியிருந்தார். அதேநேரம், அடுத்த சீசனில் ஒருவேளை தோனி ஆடவில்லையென்றால் என்ற கேள்விக்கு விடை இதுவோ?
Similar News
News November 9, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

திருவள்ளுவர் பிறந்த இடம் கன்னியாகுமரி என தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்த பிரபல எழுத்தாளர் எஸ்.பத்மநாபன்(91) காலமானார். வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட அவர், குமரி வரலாற்று மற்றும் கலாசார ஆராய்ச்சி மையத்தின் நிறுவனராகவும் இருந்துள்ளார். பத்மநாபன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 9, 2025
இளவரசர் போல இருந்ததில்லை: செங்கோட்டையன்

உழைப்பவர்களை யாராலும் வீழ்த்தமுடியாது என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். இளவரசர் போன்ற வாழ்கையை என்றும் வாழ்ந்ததில்லை என்ற அவர், எளிமையாக வாழ்ந்ததால் தான் ’நம்ம வீட்டு பிள்ளை’ என எண்ணி மக்கள் தனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனது தியாகங்கள், போராட்டங்கள் குறித்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு தனக்கு பல கடிதங்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
இபிஎஸ் வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம் உருவானது!

சென்னையில் உள்ள EPS இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். காலையில் தான், நடிகர் அருள்நிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை கிளப்பியது. அண்மைக்காலமாக TN-ல் முக்கிய இடங்களை குறிவைத்து அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் போலீசாரை தலைசுற்ற வைக்கிறது.


