News September 28, 2025
அபிமன்யு ஓரங்கட்டப்பட இதுதான் காரணமா?

WI-க்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் <<17844595>>அபிமன்யு ஈஸ்வரன்<<>> அணியில் சேர்க்கப்படாததற்கு அவரது தந்தை தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அபிமன்யுவின் தந்தை BCCI-க்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 2022-ல் அபிமன்யு அணியில் சேர்க்கப்பட்டாலும், இதுவரை Playing XI-ல் அவர் இடம்பெறவில்லை.
Similar News
News September 28, 2025
கரூர் பெரும் துயரம்.. 2 குடும்பமே அழிந்தது

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில், கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
News September 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 28, புரட்டாசி 12 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:8:00 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News September 28, 2025
யாருக்காக மாய்கின்றன இந்த உயிர்கள்?

நட்சத்திரங்கள் தங்கள் செல்வாக்கை காட்ட கூட்டும் கூட்டத்தில் அப்பாவி ரசிகர்கள் பலியாகின்றனர். அரசியல்வாதிகளின் பலத்தை காட்ட, அப்பாவி தொண்டர்கள் பலியாகின்றனர். சிலரின் லாபங்களுக்காக பல அப்பாவி குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கரூரின் குறுகிய சாலைக்குள் பல்லாயிரம் பேரை கூட்டியது தவறென்றால், இவ்வளவு பெரும் கூட்டத்துக்கு சிறு சாலையில் அனுமதி அளித்ததும் தவறுதானே? இதற்கெல்லாம் முடிவு எப்போது?