News January 23, 2025
கொடூரக் கொலைக்கு இதுதான் காரணமா?

மனைவியை கொன்ற கணவன், உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்த <<15236731>>கொடூர சம்பவத்தில்<<>>, புதிய தகவல் வெளியாகியுள்ளது. தன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென மனைவி கூறியது தான், கொலைக்கு காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்ததை கண்டுபிடித்த மனைவி, அதை தட்டிக் கேட்டதால், இந்த கொடூரத்தை கணவன் செய்ததாக தற்போது கூறப்படுகிறது. ஆனால், போலீஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
Similar News
News December 2, 2025
சிவ பக்தர்களுக்கு நற்செய்தி

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் செவ்வாய்க்கிழமை கூடுதலாக 5 பேருந்துகளும் புதன்கிழமை 25 வியாழக்கிழமை 25 வெள்ளிக்கிழமை 10 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
News December 2, 2025
தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டது: பிரேமலதா

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டதாகவும், இனி பிரகாசம்தான் எனவும் கூறியுள்ளார். எங்களது தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது தனது ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 2, 2025
நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்திடுங்க மக்களே. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?


