News November 17, 2024

தனுஷ், நயன் மோதல்: காரணம் இதுதான்?

image

தனுஷ், நயன் மோதலுக்கு என்ன காரணம் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. நயன்- விக்னேஷ் சிவன் திருமண ஆல்பத்தில், “நானும் ரவுடிதான்” படத்தில் சேர்ந்து பணிபுரிந்தபோது 2 பேரிடையே காதல் மலர்ந்ததை நினைவுகூறும் ராதிகா, தனுஷ் தன்னிடம் நயன், விக்னேஷ்க்கு வெட்கம், மானம் இல்லையா? என கேட்டதாக பேசும் காட்சி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதான் 2 பேரிடையேயான பிரச்னைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 15, 2026

அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

image

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT

News March 15, 2026

திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ: ஜவாஹிருல்லா

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை ஜவாஹிருல்லா மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய்யை திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ என்று சாடிய அவர், LPG விவகாரத்தில் விஜய் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பினார். மேலும், அடிமைகளிடம் இவரும் அடிமையாகிவிட்டார் என்றும் எஜமானை (பாஜக தலைமை) பார்க்க டெல்லி சென்றுள்ளார் எனவும் சாடியுள்ளார்.

News March 15, 2026

PM KISAN பணம் வராதவர்கள் உடனே இதை பண்ணுங்க!

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகையை மார்ச் 13-ல் மத்திய அரசு விடுவித்தது. KYC அப்டேட் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் நிதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் pmkisan-ict@gov.in என்ற மெயிலில் புகாரளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. புகாரை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு 155261 (அ) 1800 1801 551 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!