News March 18, 2024
RCB அணிக்கு இவ்வளவுதான் பரிசுத் தொகையா?

விறுவிறுப்பான WPL இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற ஆர்சிபி அணிக்கு ரூ.6 கொடியும், டெல்லி அணிக்கு ரூ.3 கொடியும் பரிசாக வழங்கப்பட்டது. இருப்பினும் வெற்றிபெற்ற RCB மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு கொடுப்பதை விட குறைவாக பணம் கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
Similar News
News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. புதன் கிழமையும் வந்தது அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர் திரும்ப ஏதுவாக புதன்கிழமையும் (அக்.22) சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லையிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த நாள் காலை 10:55 மணிக்கு வந்துசேரும். மறுமார்க்கத்தில் அக்.23 பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு நெல்லை சென்றடையும்.
News October 20, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.
News October 20, 2025
FLASH: இந்தாண்டு ₹7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு ₹1,000 கோடி கூடுதலாக, அதாவது ₹7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு உண்மையிலேயே சரவெடிதான்..