News October 18, 2024
Bigg Boss வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா?

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் ரவீந்தர் வெளியேறியதையடுத்து, தற்போது வீட்டில் 17 பேர் இருக்கின்றனர். இந்த வாரம் நாமினேஷனில் VJ விஷால், சௌந்தர்யா, தர்ஷா குப்தா, ரஞ்சித், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, சாச்சனா, அர்ணவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அர்ணவ் மற்றும் தர்ஷா குறைவான வாக்குகளைப் பெற்று பின்தங்கியுள்ளனர். எனவே இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என தெரிகிறது.
Similar News
News July 4, 2025
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் குஜராத்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து, குஜராத் அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஒரு வாரத்திற்கான அதிகபட்ச பணிநேரம் 48 மணி நேரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும், பெண்கள் இரவு ஷிஃப்டில் பணியாற்றும் வகையிலும் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில், ஆந்திராவில் வேலை நேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த, அம்மாநில அரசு முடிவெடுத்தது. வேலை நேரத்தை உயர்த்தும் முடிவு சரியா?
News July 4, 2025
சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

வரும் ஜூலை 13-ல் மீன ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடையும் சனி, நவ.28 வரை அதே நிலையில் நீடிப்பார். இதனால் பலன் பெறும் ராசியினர்: *மிதுனம்: வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். தடை நீங்கும் *கன்னி: பணவரவுக்கான புதிய வழிகள் திறக்கும். உறவுகள் மேம்படும். *தனுசு: தொழிலில் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். நிதிநிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும்.
News July 4, 2025
சைவ உணவு சாப்பிடுபவரா… இத கவனிங்க

அசைவ உணவு சாப்பிடும் பெண்களைவிட, சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகம் என்று லீட்ஸ் பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லும் ஆய்வாளர்கள், எலும்பு & தசைகள் உறுதிக்கு தேவையான புரதம், கால்சியம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகளை தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்கின்றனர்.