News April 22, 2025
‘சச்சின்’ ஷாலினிக்கு டப்பிங் பேசியது இவரா..!

விஜய் நடித்த ‘சச்சின்’ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, கடந்த 3 நாள்களில் ₹5 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஜெனிலியாவுக்கு டப்பிங் பேசியது நடிகை கனிகாதான் என தெரியவந்துள்ளது. இவர் அஜித்துடன் ‘வரலாறு’ படத்தில் நடித்தவர். ஜெனிலியா எப்படி ரியாக்ஷன் கொடுத்தாரோ, அதேபோல் நடித்துதான் கனிகாவும் டப்பிங் பேசியதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் சரிந்து 82,180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து 25,232.50 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
News January 20, 2026
கவர்னரை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது: TTV

மக்களுக்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டிய கவர்னர் உரை, திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பதாக TTV தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், உண்மைக்கு புறம்பான தகவல்களை அறிக்கையாக தயாரித்து அதனை கவர்னர் வாசிக்க திமுக நிர்பந்தித்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் தேசிய கீதத்தை முதலில் பாடக்கோரி நீண்ட நெடிய பாரம்பரியமிக்க பேரவை மரபை மாற்றக் கோருவது அழகல்ல என கவர்னரையும் சாடியுள்ளார்.
News January 20, 2026
சற்றுமுன்: தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ₹3,600 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் ₹1,280 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹2,320 உயர்ந்திருப்பது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


