News February 8, 2025

டெல்லியின் அடுத்த முதல்வர் இவர்தான்?

image

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கும் பாஜகவின் பர்வேஷ் வர்மா அடுத்த முதல்வர் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் வெற்றி செய்தி கிடைத்த கையோடு அவர் அமித் ஷாவை நேரில் சந்தித்திருக்கிறார். டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான இவர், களத்தில் கெஜ்ரிவாலை எதிர்த்து பல மேடைகளில் முழங்கி, நேரடியாக அவரது சொந்த தொகுதியிலேயே வீழ்த்தியிருக்கிறார்.

Similar News

News February 8, 2025

ரீசார்ஜ் பண்ணாமலே போன் கால் செய்யலாம்.! சீக்ரெட் டிப்ஸ்

image

இதற்கு ஒரு சிம்பிள் & சீக்ரெட் டிப்ஸ் இருக்கு. ஆனால், இதற்கு ஒரே ஒரு கண்டிஷன் உங்கள் போனில் WiFi அழைப்பு வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால், போன் Settingsல் Network & Internet ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில், SIM card & Mobile networkஐ தேர்ந்தெடுக்கவும். அதில் கீழே இருக்கும் WiFi calling dongleஐ கிளிக் செய்து, WiFi callingஐ ஆன் செய்து கொள்ளவும். அவ்வளவு தான். SHARE IT.

News February 8, 2025

ரெப்போ குறைப்பு: EMI எவ்வளவு குறையும்?

image

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை 6.25% ஆகக் குறைத்துள்ளது. இதனால் வங்கி லோன்களுக்கான EMI-யும் குறையும். உதாரணத்துக்கு, வீட்டுக்கடனாக ரூ.20 லட்சம் 20 ஆண்டுகள் லோனில் வாங்கி இருந்தால் ஆண்டுக்கு ரூ.3,816, ரூ.30 லட்சத்துக்கு ரூ.5,712 மற்றும் ரூ.50 லட்சத்துக்கு ரூ.9,540 குறையும். 5 ஆண்டு கார் லோனும் ரூ.5 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ.732, ரூ.7 லட்சத்துக்கு ரூ.1020, ரூ.10 லட்சத்துக்கு ரூ.1464 குறையும்.

News February 8, 2025

இருட்டுக் கடை அல்வாவின் வரலாறு

image

1900களில் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்ற நெல்லை சொக்கம்பட்டி ஜமீன், அங்கு அல்வா சாப்பிட்டுவிட்டு சுவையில் மயங்கி அந்த குடும்பத்தை நெல்லைக்கு அழைத்து வந்துவிட்டார். அக்குடும்பத்தைச் சேர்ந்த பிஜிலி சிங், 1940களில் நெல்லை இருட்டுக் கடையை நிறுவினார். அதன்பின், தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தினர் அதே பாரம்பரியத்துடன் கடையை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!