News September 21, 2025
BCCI-ன் அடுத்த தலைவர் இவர் தானா?

BCCI தலைவர் தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் மிதுன் மன்ஹாஸ் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இவரே அடுத்த BCCI தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. J&K கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய மிதுன், IPL-ல் டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல அணி நிர்வாகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News September 21, 2025
தசைகள் வலுபெற இந்த யோகாவை டெய்லி பண்ணுங்க!

*கால்களை 2 அடி அகற்றியபடி, கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டி நிற்கவும் *மூச்சை வெளிவிட்டு கொண்டு இடது கையால் வலது கால் பெருவிரலைத் தொடவும் *பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து பழைய நிலைக்கு திரும்பி, மூச்சை வெளிவிடவும் *இதேபோல் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும் *இதை தினமும் செய்து வந்தால் உடல் தசைகள் வலுப்பெறும். SHARE IT.
News September 21, 2025
TN-ஐ பேசாமல் காசாவை பற்றி பேசுவதா? தமிழிசை

பாலஸ்தீனத்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக, சமீபத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேரணி நடத்தியது. அதில் பேசியவர்கள், காசாவில் நடக்கும் பிரச்னைக்கு PM மோடியை காரணம் காட்டியதாக தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள் எனவும், முதலில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை பற்றி பேச வேண்டும் எனவும், அவர் விமர்சித்துள்ளார்.
News September 21, 2025
ஆங்கிலேய கல்வி முறை தொடர்வது வேதனை: கவர்னர்

2014-ல் மோடி PM ஆனதும் புதிய இந்தியா பிறந்ததாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியாளர்களுக்கு பாக்.,கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை எனவும், ஆன்மிகம் தான் இந்த தேசத்தின் ஆன்மா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தை அழித்ததாகவும், சுதந்திரத்திற்கு பிறகும் அவர்களது கல்வி முறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.