News October 18, 2025
DUDE ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ’டியூட்’ திரைப்படம் நேற்று (அக்.17) வெளியானது. முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், ஆனால் 2-ம் பாதி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ‘டியூட்’ திரைப்படம் நவ.14-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Similar News
News October 18, 2025
கூட்டாக 186 சொகுசு கார்கள்.. ஆஃபர் மட்டும் ₹21.22 கோடி!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாக்கியத்தை Jain International Trade Organisation (JITO) நிரூபித்து காட்டியுள்ளனது. 186 உயர்ரக கார்களை வாங்க முடிவு செய்த இந்த அமைப்பினர், ஆஃபருக்காக பல டீலர்களிடம் பேசியுள்ளனர். கடைசியாக ₹149.54 கோடிக்கு இவர்கள் கார் வாங்கியதில், தள்ளுபடியாக மட்டும் ₹21.22 கோடி கிடைத்துள்ளது. கார் மட்டுமின்றி, தங்கம், சொத்து என பலவற்றையும் இவர்கள் கூட்டாகவே வாங்குகின்றனர்.
News October 18, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹2,000 குறைந்தது. இந்நிலையில், மாலையில் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சவரன் ₹400 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹12,000-க்கும், 1 சவரன் ₹96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ₹190-க்கு விற்கப்படுகிறது.
News October 18, 2025
இந்த பழங்களை மழை காலத்தில் சாப்பிடாதீங்க!

பருவ மழை காலம், மழையை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே பலவித தொற்றுநோய்களையும் கொண்டு வரும். மழைக்கால ஈரப்பதம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, சில பழங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி நீங்கள் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன என்று மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…