News March 12, 2025

‘AK-64’ பட இயக்குநர் இவரா?

image

அஜித்தின் 63வது படமான ‘குட் பேட் அக்லி’ வரும் ஏப்.10ல் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, பிரசன்னா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Similar News

News July 10, 2025

தர்மபுரியில் கலெக்டர் ஆய்வு

image

நல்லம்பள்ளி வட்டம், சோமனஅள்ளி கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வேளாண்மை இயந்திரங்கள் மேளாவில் (District Level Agri.Machinery Mela) தென்னை மட்டை தூளாக்கும் கருவி மற்றும் டிரோன் (மருந்து தெளிப்பான்) மூலம் மருந்து தெளிக்கும் கருவி ஆகியவற்றின் செய்முறை செயல் விளக்கம் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், பார்வையிட்டார்.

News July 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News July 10, 2025

X நிறுவன சிஇஓ ராஜினாமா

image

X நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான (சிஇஓ) லிண்டா யாக்காரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, அதன் பெயரை X என மாற்றினார். அதன்பிறகும் சிஇஓ பதவியில் 2 ஆண்டுகளாக லிண்டா நீடித்தார். இந்நிலையில் தனது பதவி விலகல் குறித்து சமூகவலைதளத்தில் லிண்டா பதிவிட்டுள்ளார். இதை வரவேற்று பதிவிட்டுள்ள எலான் மஸ்க், உங்கள் பங்களிப்புக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!