News August 17, 2025

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா..!

image

2026 தேர்தலில் கோவை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அவரது கவனம் தென்மாவட்டத்திற்கு திரும்பியுள்ளதாம். அதனாலேயே தவெகவின் 2-வது மாநாட்டை மதுரையில் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் கீதாஜீவனின் தூத்துக்குடி தொகுதியில் விஜய் களமிறங்க இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. தூத்துக்குடி விஜய்க்கு கைகொடுக்குமா?

Similar News

News March 4, 2026

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

image

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.

News March 4, 2026

போரால் சிக்கித் தவிக்கும் ரொனால்டோ

image

கால்பந்து வீரர் ரொனால்டோ, போர் பதற்றம் காரணமாக சவுதியில் இருந்து குடும்பத்துடன் பிரைவேட் ஜெட்டில் வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அது உண்மையில்லை என அல்-நாசர் எஃப்சி தெரிவித்துள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். எனவே இந்த நேரத்தில் அவரால் வேறு இடத்திற்கு செல்லமுடியாது என கால்பந்து க்ளப் விளக்கமளித்துள்ளது.

News March 4, 2026

பங்குச்சந்தை சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

image

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,723 புள்ளிகள் சரிந்து 78,521 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 476 புள்ளிகள் சரிந்து 24,600 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!