News June 5, 2024

முன்னாள் முதல்வருக்கா இந்த நிலை?

image

ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர் சந்திரசேகர ராவ். தனி மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்துள்ளார். இவருடைய பிஆர்எஸ் கட்சி, மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அவரது கட்சியின் 8 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததோடு, வாக்கு சதவீதம் தற்போது 17%க்கும் குறைவாக உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் வாக்கு சதவீத, 41.71% ஆக இருந்தது.

Similar News

News March 26, 2026

PNG இணைப்புக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு

image

PNG இணைப்பை பெற விருப்பமுள்ள வணிக & தொழில்துறையினர் CGD நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என TN அரசு தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Torrent Gas: 1800-2125-6789), காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (AG&P/Think Gas: 1800-202-2999), திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Adani Total Gas: 079-47545252) தொடர்பு கொள்ளவும். இதர மாவட்டங்களுக்கு இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்யவும்.

News March 26, 2026

தாமரைக்கு வாக்களித்து பாவம் செய்யாதீர்கள்: கருணாஸ்

image

தமிழக வரலாற்றில் பாஜகவுக்கு இவ்வளவு சீட் கொடுத்ததாக தனக்கு ஞாபகமில்லை என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவிடம் சீட் வாங்கிய பாஜக, சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் நிற்க வைக்கிறது; தேர்தலுக்கு பிறகு அவர்களின் வாக்கு சதவீதத்தையும் தங்கள் கணக்கில் அது சேர்த்துவிடும் என விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து, பாவகாரியம் செய்து விடாதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

வாக்காளர் பட்டியல்.. புதிதாக சேர பொதுமக்கள் ஆர்வம்

image

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் என EC தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இதுவரை 3.20 லட்சம் பேர் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.70 கோடி ஆக உயர வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!