News April 21, 2025
பிடிஆர்-க்கே இந்த நிலையா? அவரே சொன்ன பதில்

கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.
Similar News
News November 27, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-27) குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா மிக அவசியமான ஒன்றாகும். சிசிடிவி கேமராவை பொருத்துவோம். பாதுகாப்பை உறுதி செய்வோம். என பதிவிட்டுள்ளனர்.
News November 27, 2025
தஷ்வந்த் வழக்கில் TN அரசுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கில், தஷ்வந்த் விடுதலைக்கு எதிரான தமிழக அரசின் <<18388187>>சீராய்வு மனுவை<<>> சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.
News November 27, 2025
இம்ரான் கான் எங்கு இருக்கிறார்?

EX பாகிஸ்தான் PM <<18395665>>இம்ரான் கான்<<>> உயிரிழந்துவிட்டதாகவும், சிறையில் இருந்து மாற்றப்பட்டதாகவும் வெளியான தகவலில் உண்மையில்லை என அடியாலா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல், 5 ஸ்டார் ஹோட்டலில் கூட கிடைக்காத வகையில், அவருக்கு தரமான உணவு, TV, ஜிம் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.


