News January 22, 2025
ஜெயிலர் 2வில் இவருக்கு பதில் இவரா?

ஜெயிலர் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்ற debate சோஷியல் மீடியாவில் அதிகரித்து விட்டது. கேன்சர் சிகிச்சையில் இருக்கும் சிவராஜ்குமார் படப்பிடிப்பு நேரத்தில் வந்துவிட முடியுமா? என்ற யோசனையில் அவருக்கு பதில் மற்றொரு மாஸ் ஹீரோவை கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். பாலைய்யா நடிக்க போகிறாராம். ரஜினி – பாலைய்யா காம்போ எப்படி இருக்கும் நீங்க சொல்லுங்க?
Similar News
News January 21, 2026
ராசி பலன்கள் (21.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 20, 2026
சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள்: CM ஸ்டாலின்

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை CM ஸ்டாலின் வழங்கியுள்ளார். கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காதவர்கள் சிலர் இருக்கதான் செய்வார்கள் என்றும், அவர்கள் தேவையில்லாத கருத்துகளை கூறி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் அந்த சூழ்ச்சியில் சிக்கி பலியாகிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.


