News October 26, 2024
இதுவா திராவிட மாடல் அரசின் சாதனை?: TTV

மது விற்பனையை குறைய விடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருளை பறிமுதல் செய்யும் போலீஸ், அதன் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்யாதது ஏன் என அவர் வினவியுள்ளார். மேலும், போதைப் பழக்கத்திற்கு எதிராக வீடியோ வெளியிடும் CM-க்கு, வீதியில் போராடும் தாய்மார்களின் குமுறல் கேட்கவில்லையா எனவும் கேட்டுள்ளார்.
Similar News
News January 20, 2026
ரஜினியை இயக்கும் சுதா கொங்கரா?

‘பராசக்தி’ படத்தின் கதைக்களத்திற்காக ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக சுதா கொங்கரா கூறியுள்ளார். அப்போது, அவருக்காக தான் எழுதிய காதல் கதை பற்றி கேட்டறிந்ததாகவும், ஆனால் முழுக் கதையை விவரிக்கவில்லை என்றும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இது சாத்தியமானால், பல வருடங்களுக்கு பிறகு ரஜினியை ROM-COM படத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இந்த காம்போ எப்படி இருக்கும்?
News January 20, 2026
நாளை அதிமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?

கடந்தாண்டு நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணைவார் என பேசப்பட்டது. இந்நிலையில், நாளை EPS முன்னிலையில் அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தூத்துக்குடியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. கல்யாண சுந்தரத்தை தொடர்ந்து நாதகவின் மற்றொரு முகமான காளியம்மாள் அதிமுகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
News January 20, 2026
விஜய் விரைவில் இதை அறிவிக்கலாம்

தவெக நிர்வாகிகள் & KAS உடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கவும் குழுக்கள் அமைப்பது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் காங்., போலவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை தவெக அறிவிக்க வாய்ப்புள்ளது. இக்கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


