News September 28, 2025

என்று தனியும் இந்த சினிமா மோகம்? இயக்குநர் அமீர்

image

கரூரின் மரண ஓலத்தை சுட்டிக்காட்டி, உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழுந்தைகள் பலியா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள் என கேட்ட அவர், என்று தனியும் இந்த சினிமா மோகம் எனவும் வேதனைப்பட்டுள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 28, 2025

கரூர் கருப்பூர் ஆகிவிட்டது: வைரமுத்து

image

தாங்க முடியவில்லை, இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரங்கல் எனக் கூறிய அவர், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே நீண்ட துயரத்துக்கு நிவாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

Just In: N.ஆனந்த், CTR நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொ.செ., N.ஆனந்த், CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சிய செயல்களுக்கு தண்டனை, கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை ஆகிய 5 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

News September 28, 2025

கரூர் துயரத்தில் மரணித்த இளம்ஜோடி

image

கரூர் துயரத்தில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி பூக்காமல் செடியிலேயே மரணத்திருக்கிறது. கோகுலஸ்ரீ – ஆகாஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்த நிலையில், வருங்கால மனைவியுடன் விஜய்யை பார்த்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு ஆகாஷ் கரூர் சென்று இருக்கிறார். பொண்ணு மாப்பிள்ளையாக ஜோடியாக சென்றவர்கள் திரும்பி வரவில்லை.

error: Content is protected !!