News January 25, 2025

செவ்வாய் கிரகத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?

image

செவ்வாய் கோளில் ஆய்வில் ஈடுபட்டுள்ள ரோவர்ஸ் சந்திக்கிற பிரச்னை டயர் பஞ்சர் தானாம். செவ்வாயின் கரடுமுரடான பரப்பு ரோவர்ஸின் சக்கரங்களை பழுதாக்குவதால் ஆய்வு முழுவீச்சில் செய்ய முடிவதில்லை. இதற்கு தீர்வாக என்ன நடந்தாலும் தனது வடிவத்துக்கு திரும்பிவிடும், அலுமினிய Shape Memory Tyres உருவாக்கத்தில் மும்முரம் காட்டி வருகிறது நாசா. இந்த டயர்களை நிலவிலும் பயன்படுத்தும் ஐடியா இருக்கிறதாம்.

Similar News

News August 28, 2025

அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்.. புது வியூகம்!

image

நெல்லையில் பேசிய அமித்ஷா TN-ல் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை, EPS-யை முதல்வராக்க உழைக்க வேண்டுமென்றார். இக்கருத்துகளின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக EPS தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.

News August 28, 2025

லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.

News August 28, 2025

கச்சத்தீவை விட்டுத்தர முடியாது: இலங்கை உறுதி

image

மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும் என விஜய் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும், தேர்தல் காலம் என்பதால் அரசியலுக்காக ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவித்து வருவதாகவும் இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

error: Content is protected !!